கலாஷ்நிகோவ்
நேற்று நான் நடந்த பாதைகளில்
இன்று கலாஷ்நிகொவ்கள் கடமை செய்கின்றன
நாளை வெடிக்கும் புரட்சிக்கு நேற்றே குழிதோண்டுகிறார்கள்
நாட்டைக் கடிக்கும் வரட்சிக்கு விமோசனம் கேட்டால்
நாடாளுமன்றம் நகம்கடித்து
நால்புறமும் தலையாட்டுகிறது
வாங்குவதை வாங்கிக்கொண்டு கோட்டையில்
நாம் இருப்போம், நாட்டின் கடன் எங்கள் வீட்டிலில்லை
நாணயமாய் நாம் நடிப்போம்
நாணயத்தின் வீழ்ச்சிக்கு
நாட்பட்ட வைரஸ்தான் மூலம் என்போம்- பூப்போன்ற
வேட்பாளர் கையில் பூமாலையைப் போலே இந்நாடு
எடுப்பார் கைப்பிள்ளை நாங்கள்,
இனாமாய் கடன் கொடுத்தால்
இனம், மொழி பேதம் பார்ப்பதில்லை
காகம் பறக்கக் கூட வானம் இல்லாத நாட்டுக்கு
கடன்குடுக்க பறந்து வரும் காப்பாளர்கள் சொற்படி
உடனுக்குடன் தலையாட்டி பழகிவிட்டோம்
கலவரம் இல்லா ஊரிலும் கலவரம்
வருமென்று செய்தி சமைத்து
நிலவரத்தை சாதகமாக்குவோம்
தேரிழுத்து தெருவில் விட்டுச் செல்வது போல்
தேச மக்கள் தெருவில் நிற்க
தேசங்கள் தோறும் சுற்றுலா செல்வோம்
Comments
Post a Comment