நினைவோ ஒரு பறவை...
எரியும் தீயாக நானாக வழியும் நீராக நீயாக,
தேயாத சோகம் ஒன்றை சுமக்கின்ற நானுமோர் மேகம்,
பாயாத கண்ணீர் தேங்கிய விழிரெண்டும் அவள் கால்
நனைத்து சென்ற ஈரம், நீராக நீராக நேராக பாய்ந்தாள்
என்னுள், மேடாக இருந்தவன் மலர்பட மணலாக உதிர்கிறேன்.
கானல் கடிதங்கள் சுமந்துமே கனக்கும் என் மனம்
மணல்வெளியாக இருந்த மனவெளி காடாக பூக்கிறது
மழையாக வந்தவள் மரமொன்று நட்டுச் சென்றாள் மனதில்,
கிளைவிடும் கனவுகள் கண்ணிலே காணாமல் சென்றாள் என்னிலே.
ஊமைக்கொட்டான் கண்கள் உற்றுநோக்கும் போது,
ஊர்ந்திடும் நாணம் மேனி கூச்செரியும் போது,
உள்ளக்கிளையில் ஓர்குரங்கு ஒய்யாரமாய் ஆடிட,
ஒடிந்து போகிறேன் அவள் நினைவில் நொடிக்கு நொடி...
உவமைகள் தேடி என்பேனை களைக்கும்,
அவள் புராணம் பாடி தாள்களும் சலிக்கும்,
ஓவியப்பெண்களில் உயிர்பெற்ற ஒரு ஓவியம்,
காவியப்பெண்களின் கண்படுமாப் போலொரு காவியம்...
தூரிகை எடுத்து தன்பெயர் மறந்த பிரம்மன்,
துலக்கிய ஓவியம், வண்ணம் ஊறி உயிர் ஊற்றிட,
காரிகை வந்தாள் கண்முன்னே... பெரும்
பேரிகை முரசொலித்து சரணடையும் மனது...
என் கைக்கிளையில் மலர்ந்த பூ, உதிர்வதை
பார்க்கிறேன், என் நினைவுப்பெட்டகத்தில் என்றும்
வாடாத உன் நினைவு, பத்திரம் செய்கிறேன்... - உன்
நினைவும் பறவையானது சிறகு விரித்து காலம் எனும் வானில்...
எத்தனை கோடி முறை படித்தாலும் சலிக்காத வரிகள் ! பிரம்மாதம் !
ReplyDelete🙌
Delete