எழுகோல்களில் சயனைட்...
நிறைந்தேன் நினைத்தேன்
இறந்தே பிளைத்தேன், கனித்தேன் குரலால்
இனித்தேன் நிறப்பினாய், புதிதாய் ஜனித்தேன்
ஜானகியுன் கண்ஜாடை படவே...
கவிசுரக்கும் வரிகளில் காதல் சுரக்க
எழுகோலுக்கும் எனக்குமிடையே மோதல் உன்னால்
தீபம் மலர எரியும் திரியாய் - கோபமலரே
உன்னால் பனித்துளிகளில் தீவிபத்து...
எரியும் பனித்துளியிடம் மலருக்கென்ன கோபம்?
அவள்விழி எழுதும் ஹைக்கூக்களிடம் என் வரிகள்
தோற்றிட எழாமல் விழுந்தேன் விழிகளில்...
சுவாசம் படவே மனத்தோட்டம் பூக்கிறது
பூவாசம் சுடவே அந்த சூரியன் வேர்க்கிறது.
வானம் தொலைத்த கருநிலவுகள் கண்ணுக்குள்ளே
வளரும் பிறைகள் உனைக்கண்டபின் தேய்ந்துமே
வருந்தவே, நீ பார்த்திட வானம்பூக்கிறது வண்ணங்களை.
வண்ணமழையில் தளிர்விடும் என்னுள் எண்ணக்காடு.
பார்வைகளை பயிரிட உன் நினைவுகள் பூக்கும்,
கோர்வையாய் சில வார்த்தை ஒத்திகை பார்க்கும்
உதடுகள் உன்முன் ஊமைபாஷை பேசிட - உன்
ஊசிக்கண்கள் துளைத்திட மனதில் விரிசலானது.
உனக்காக பூக்கள் சிலுவை சுமக்கின்றன,
எனக்காக எழுகோல்களில் சயனைட் சுரக்கிறது.
இலுப்பைப்பூவிதழ்கள் கசக்கிறது, இதயம் கசிகிறது
இவள் இதயம் விட்டுச்சென்றாள்
என் இதயம் வாங்கிச் சென்றாள்....
மீண்டும் பூரிப்பு !
ReplyDelete