பெற்றதால்...

 

ஊடறுத்து ஓடிவரும் நதிகளுக்கும்

ஊர் தோன்ற தடம் அமைத்த மரங்களுக்கும்

உடல் செழிக்க உரம் செய்யும் மண்ணுக்கும்

முதல் வணக்கம்

 

வானம் சிந்தும் கண்ணீரில் வயல் சிரிக்கிறது

வயல் சிரித்த கணங்களால் வயிறு நிறைகிறது

முற்றத்து நிலாவோ முகம் சுளிக்கிறது

காரணம் என்னோவோ, கவளச்சோறு கேட்கிறது

 

செழிக்கின்ற செய்நிலம் சேய் போல

சிங்காரிக்கும் தாய்மண், காயம் அடைக்கலமாவதும்

கழிவுகள் கற்பகமாவதும் கவிதைகள் சங்கமமாவதும்

காவியக் களமமைப்பதும் கைப்பிடி மண்ணே

 

கதை கேளு பெண்ணே, கருவை சுமக்கும் தாய்களை

சுமந்தே தாய்களுக்கு தாயாகி, தரணிஎன்ற தாய்

வடிவில் தவழும் எங்கள் பாதங்களை

தினம் தழுவி ஆசிர்வதித்தாய்

 

விதைத்தாய், அதில் விருட்சமென விதித்தாய்.

வதைத்தாய், ரண ராட்சதரை உதைத்தாய்

சதைத்தாய் சிசுவை சீண்டாமல் போனாலும்

உயிர்த்தாய் சிசு வாழ உலகம் உகுத்தாய்


-சி.சதுர்

Comments

Popular Posts