கடன் சூழும் நாடு

காணாமல் போன காலங்கள்

கரைமீது தவழும் மேகங்கள்

கடனுக்குள் கருகும் கோலங்கள்

கடல்சூழ் நாடு பாருங்கள்

கடன்சூழும் நாடிது பாருங்கள்


வேகாமல் வேகும் தேகங்கள்

வெளியில் தெரியாத சோகங்கள்

விளங்காத நாடு பாருங்கள்

விளையாடும் விதி பாருங்கள்

வேண்டி செய்த சதியிது கூறுங்கள்


விளக்குகள் தேடும் எம்மக்கள்

விடிவது வருவதில்லை பாருங்கள்

விரல்வைக்கும் முன் யோசியுங்கள்

விரல் சுடும் நேரம் பாருங்கள்


ஐந்தாண்டு குத்தகை பாருங்கள்

அமைச்சருக்கு இவ்வளவு தாருங்கள்

அழிக்கும் ஜென்மங்கள் பாருங்கள்

ஆண்டாண்டாய் அனுபவிக்கும் பாருங்கள்


ஆட்சிகள் மாறும் தோற்றங்கள்

ஆனால் இங்கு அழிவுகள் மாறாத தேற்றங்கள்

கட்சிகள் மாறும் காட்சிகள்

கமிசன்கள் கேட்கும் கோஷ்டிகள்


-சி. சதுர்


Comments

  1. விரல் நுனியில் தலை விதி
    இருந்தும் கெட்டது எம்மதி

    ReplyDelete

Post a Comment

Popular Posts