நெஞ்சு பொறுக்குதில்லையே!
சிறைகொண்ட எங்கள் மனச்சீதைகளை கண்டால்
சினம்கொள்ளும் எங்கள் கீதையும்
மனம்செல்லும் உங்கள் பாதையும் வேண்டாம்
மறைசொல்லும் பாதையைக் கண்டால்
கறைகொள்ளும் கண்கள் முன்னால்
குறைசொல்லும் கூட்டங்கள் தன்னால்
குலம்கெடும், குட்டுக்கள் வெளிப்படும்
காலம் கூடும் கைகளும் கூடும்
நிழைமுன்னே வண்ண நிழலைக் கண்டேன்
பிழைமுன்னே என்பால் பொய்கள் கண்டேன் – அவை
களையுமுன்னே காலம் களைந்திடக் கண்டேன்
களையுமுன்னே பாவம் விளைந்திடக் கண்டேன்
கனம்கூடும் கணங்களில் கண்கள் கப்பலாயின
பிணம்கூடும் நிலங்களுக்கு மண்ணே கப்பலேறின
மனம்கூடா மாந்தர் பண்ண பழிகள் பாடையாயின
வனம்கூட வானமும் எரிய, அந்த பாடைகள் மேடையாயின
பணம் கூடிய திசையில் இன்று பாதை முளைக்கும்
ரணம் கூடிய சதைககளில் உபாதை துளைக்கும் – அவர்
பிணம் ஆடிச் சிதையில் சேர்ந்தால் சிதையும் பணம்
பறிக்கும்.
ரணம் இனிக்கும், இந்த பணம் படும்பாடு நினைத்தால்
பாவம் பெரும்பங்கு பணம் அதிற்பெரும்பங்கு
சாபம் சம்பவிக்க சாமிக்கொரு சில்லறை மாலை?
பாசம் பிரசவிக்க பணத்துக்கு அறுவைச்சிகிச்சை,
காசும் பிரசவிக்கா பிணமும் ரணமிங்கு
குலைகெட்ட வாழைகள்
குலைநடுங்கும் கோழைகள்
நிலைகெட்ட மாந்தர்கள்
நிறம்மாறும் வேந்தர்கள் – எங்கும்
பணப்புகை சூழும் சிதைக்காடுகள்...
Comments
Post a Comment