ஒருவழி சாலை

பேனை மைத்துளையில் பெண்ணவள்
புகுந்திட வற்றிப்போனேன், வரிகள்
வரவில்லை, வார்த்தை விழவில்லை...
என் தாள்களில் கவியின் வறுமை உன்னால்...

கடந்து போவதெப்படி?
வலிகள், ரணங்கள் அளந்த என்
தராசின் படிக்கற்கள். அவள் வந்திட
வருணனைகளை படியளக்கின்றன.

நான் மறந்தே போயினும் - என்பேனை
மறந்திட மறுக்கிறது. மனம் வந்து
குமுறும் குளியலறை கண்ணாடியாய்
என் கவிதைகளில் என் விம்பம் கரைவதேனோ?

காலச்சேவல் கூவியும் என் வரிகளோ
உன்னை வரிந்து கொண்டு தூங்குவதாலே,
எழுத்தைத் தொலைத்த கோலால்
இதயத்தராசில் கூடிடும் கனம்.

நீயோர் ஒருவழி சாலை,
பாதிவழியில் நான், 
மோதிக்கொண்டு நிற்கிறேன்.
மறுபாதி கடந்துமே 
என் பயணம் நான் தொடர்ந்திட,

முயல்கிறேன்...









Comments

Popular Posts