கவிகிறுக்கும் ஜாதி...
சொல்தேடி சொல்தேடி சுகம்தேடும் ஜாதி
பூக்கொய்து பூச்சரங்கள் பிரசுரிக்கும் ஜாதி
தீ சுட்ட சொற்சங்கு ஒலிக்கின்ற ஜாதி
தீண்டாமை தீயிலே எரிக்கின்ற ஜாதி
போர் சுட்ட புண்களை அணைக்கும் ஜாதி
நீர்தட்டும் கண்களை துடைக்கின்ற ஜாதி
சீல் தட்டிய ஊழலை உடைக்கின்ற ஜாதி
சிறுபான்மை குரல் உரத் தொலிக்கும் ஜாதி
புன்னகைகள் பிரசவிக்க உழைக்கும் ஜாதி
புரட்சிகள் பிறந்திட பிரசவவலி ஏற்கும்ஜாதி
காட்சிகள் புனைந்தே களிகொள்ளும் ஜாதி
கண்ணுக்கு உவமைகள் கடன்வாங்கும் ஜாதி
தனிமைத் தவமிருந்து கவியுறுக்கும் ஜாதி
இனிக்கும் சொற்களை சுவைக்கும் ஜாதி
பனித்துளியை ரசித்தே கண்பனிக்கும் ஜாதி
நுனிப்பூ பறித்தே பத்திகள் படைக்கும் ஜாதி
பிரிவினை வதைத்திட வரிகோர்க்கும் ஜாதி
பிள்ளைக்கவியெழுத சொற்தரிதட்டும் ஜாதி
மெல்லும் மெய்களை உமிழ்கின்ற ஜாதி
மஞ்சள் பத்திரிகை துகிலுரியும் ஜாதி
பிறைகளை துரத்தி களைத்திடும் ஜாதி
கறைகளை களைந்திட கவிபாடும் ஜாதி
மறைகள் தட்டிடாமல் மைதட்டும் ஜாதி
சொந்த சிறைகள் கட்டியே அங்கே
கவிகிறுக்கும் ஜாதி...
Comments
Post a Comment