வேர்கள்

காலைத் தேநீர் சாயம் ஊறவே,
கண்ணீர்க்கடல் கடைந்திடும் எம்
மந்தார மலைகள், தார்-வாசுகிகள்
நெரித்திட மூச்சு வாங்கும் மலைகள்.

மலைமூடிய தேயிலைநிரை,
மலைவாழ் எம் பரம்பரை - எங்கோ
பிடுங்கப்பட்டு இங்கே நடப்பட்டோம் - எம்
வியர்வை குடிக்கும் வேர்கள்.

சீதைகள் கொழுந்து பறித்திடும்
அசோகவனங்களில் இங்கு 
அநுமன் வாலாய் லயன்கள், 
பெயரிடாத அகதி முகாம்களாய்.

பிறந்து வளர்ந்து உழைத்துமாளும் - எம்
சிதைகள் மேல் தேயிலை நிரைகள்
முளைக்கட்டும். கணுக்காலில் அட்டைகள், 
நடந்த வழி குருதிச்செம்மண் சிவக்கட்டும்.

தினமொரு கூடைக்கொழுந்து -
தேர்தல் திருநாளில் வாக்குப்பெட்டி...







Comments

Popular Posts