அலைவரக் காத்திருந்து...

புல்விழுங்கும் புழுவாய் 
சொல்விழுங்கிச் சென்றாள்.
நள்ளிரவின் நிலவாய் - என்
நாள் விழுங்கிச் சென்றாள்.

குடைதாண்டி எனைத்தீண்டும்
சாரல் மழை - அவளோ 
மடைதாண்டி மனம் தொட்ட
நீரின் அலை...

பாலைநிலத்தில் மேகமழை
பேய்ந்துமே - ஈரம் தோய்ந்துமே
குளிர்கிறேன் - மழையாய் அவள்
மணலாய் நான்.

கோடைவெயில் சுடவில்லை - அவள்
கோதைவிழி பட்டே
குத்தீட்டி பாய்ந்து
குருதிக் குளமான மனம்.

பேனைமுத்தமிட்ட கன்னிவரிகள்
அவள் கண்படக் காத்திருக்கும்
காகித ஓடங்கள்.
கரைநான் கடல் நீ.







Comments

  1. காத்திருப்பின் சுமையைக் கூட சுகமாக்கி விடுகின்றன உங்கள் வரிகள் !

    ReplyDelete

Post a Comment

Popular Posts