கூன் விழுந்த நட்சத்திரம்
கூன் விழுந்த நட்சத்திரம்
கூரை பெயர்த்தே முற்றம் விழ
முளைத்தது பால்வெளி
நான் விழுந்த இடம் - அவள்
நயனங்களிடை மிதக்கும்
மஞ்சள் நிலவொளி
நீர் விழும் தடம்
கரிக்கிறது - சுடுமேகமாய்
மனம் நிலவு எரிக்கிறது
காணாத தேசம் என்
கால்சென்றாலும் - கண்
தேடும் வானத்தில் நீ
காற்றைக் கிறுக்கும் விரல் -
கவிதைத் தூறலில் நனைந்து
புகைவிடும் மனத்தீ
காகிதம் நிறைக்கும் கனத்துடன்
கையில் பேனை- சில்லிடும்
மைக்கறை உன்னால்
சொல்லிடும் இடுக்கில்
உன்முகம் - முற்றுப்புள்ளிகள்
மறக்கிறேன் உன்னால்
முடிவிலா ஓர் கவி, காற்றில்
மடித்து - அதன் காதில் உன்
முகவரி சொல்வேன்
"நீர் விழும் தடம்
ReplyDeleteகரிக்கிறது - சுடுமேகமாய்
மனம் நிலவு எரிக்கிறது"
இவ்வரிக்குரிய விளக்கத்தை கவி அறியத்தருவீர்களா?
'நீர் விழும் தடம்' கரிப்பது சோகத்தையும்,
ReplyDeleteசுடுமேகத்தில் நிலவு - தவிப்பையும் குறிக்கிறது.
அடடா எத்தனை அழகான வர்ணனை!!
ReplyDelete