Skip to main content

Posts

அறிமுகம்

கசக்கும் கவிதைகள் பற்றி...

 "ரத்தம் தண்ணீரை விட கனமானது என்றார்கள். என் கணக்கில் அது மலரை விட மென்மையானது"  என அர்த்தமுள்ள இந்துமதம் எனும் நூலில் கண்ணதாசன் குறிப்பிட்டுள்ளார். தமிழ் பாடல் வரிகளில் கவித்துவத்துடன் அர்த்தமுள்ள வெளிப்பாடுகளை உருவாக்கியவர் கண்ணதாசன் அவர்கள். அவருக்கு முன் வாழ்ந்து இன்னும் தங்கள் கவி வரிகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் மகாகவி பாரதியார், பாரதிதாசன் அவர்களை ஆதர்சமாய்க் கொண்டு கவிதை வரிகளை உற்பத்தி செய்ய கசக்கும் கவிதைகள் என்ற தலைப்பில் இந்த எண்ணிம உலகத்தில் தமிழ்க்கவிதைகளையும் பயன்தரும் கட்டுரைகளையும் பதிவிட எண்ணியுள்ளேன்.  எனவே எனது எழுத்துத்தாகம் தணியாமல் இருக்கும் வகையில் வாரமொருமுறை கவிதை அல்லது கட்டுரை அல்லது பயன்தரக்கூடிய படைப்புக்களை உருவாக்கி இங்கு பதிவிட வேண்டும் என்ற சவாலை என் முன் நானே கொண்டுவைத்துள்ளேன். 26-05-2022                                                                                                                                     நன்றி                                                                                                   -சி.சதுர்   

Latest Posts

கூன் விழுந்த நட்சத்திரம்

ராஃபா

ஒயிலாடும் விழிகள்

சிறுநண்டு மணல் மீது...

தொட்டில்

மந்தாரம்

கீறாத சொல்

அலைவரக் காத்திருந்து...

முரண்வாழ்

சமூக-விலங்கு

வேர்கள்